Vikram Sugumaran: "'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்குக் காரணம் விக்ரம் சுகுமாரன்" - வெற்றிமாறன்

6 months ago 8
ARTICLE AD BOX

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார்.

Vikram SugumaranVikram Sugumaran

சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்குத் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்' பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, "ஆசான் பாலுமகேந்திரா அவர்களின் சீடரும், இந்திய திரைப்பட இயக்குநரும், கதை - திரைக்கதை ஆசிரியருமான எனது நண்பர், இயக்குநர், நடிகர் விக்ரம் சுகுமாரனின் மறைவு ஈடில்லா பெரு இழப்பு.

எனது திரைப்படத்தில் விக்ரம் நடிப்பதற்கு இசைந்து, அது தொடங்கி, பின்னர் உருவாவதற்குத் தாமதமாகவும், நாங்கள் இருவரும் அதற்குக் காத்திருக்கும் இவ்வேளையில், அவரின் பிரிவு மனம் ஏற்க மறுக்கிறது.

Director Seenu RamasamyDirector Seenu Ramasamy

மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், சொந்தங்கள், பந்தங்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை 'சீனி' என்று அழைக்கும், அறம் பேசும் இதயமுள்ள ஒரு கலைஞன் இனி இல்லை. இதய அஞ்சலி நண்பா!" என்று பதிவிட்டிருக்கிறார்.

```மதயானைக் கூட்டம்'க்கு ரெண்டு க்ளைமாக்ஸ் யோசிச்சேன்; அது என்னன்னா?!" - விக்ரம் சுகுமாரன்

விக்ரம் சுகுமாரன் மறைவு பற்றி இயக்குநர் வெற்றி மாறன், "நான் உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது என்கூட சேர்ந்து வேலை பார்த்தவர் விக்ரம் சுகுமாரன். எனக்கு சினிமாவில் கிடைத்த முதல் நட்பு விக்ரம் சுகுமாரன்தான்.

நாங்க பாலுமகேந்திரா சார்கூட 'கதை நேரம்', 'ஜூலி கணபதி' ஆகிய ப்ராஜெக்ட்களில் வேலை பார்த்தோம். அந்த நேரத்திலிருந்து என்னுடைய கிரியேட்டிவ் வேலைகளுக்கு என்னுடன் இருந்து விக்ரம் வேலை செய்திருக்கார்.

இயக்குநர் வெற்றி மாறன்இயக்குநர் வெற்றி மாறன்

'ஆடுகளம்' படத்தின் மதுரைத்தன்மைக்கும், 'ஒத்த சொல்லால' பாடல் டான்ஸுக்கு காரணம் விக்ரம்தான். 'மதயானைக்கூட்டம்' திரைப்படம் வலுவான கலைப்படைப்பாக இருந்தது. விக்ரமுடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு.

இன்னும் அவருடைய சிறந்த திரைப்படம் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்காமல் போய்விட்டதுனு நினைக்கிறேன்" என்று வருத்தத்துடன் பேசினார்.

``முத்தையாவுக்குகூட படம் கிடைக்குது ஆனா எனக்கு கிடைக்கல!"- விக்ரம் சுகுமாரன் நேர்காணல்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article