Vinesh Phogat: ``அரசு வேலை, நிலம் வேண்டாம்; ரூ.4 கோடி போதும்..'' - வினேஷ் போகத் சொல்வதென்ன?

8 months ago 8
ARTICLE AD BOX

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 50 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த வினேஷ், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மல்யுத்த விதிமுறையின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத்வினேஷ் போகத்

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு மனமுடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் ஹரியானா சட்​டப் பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி கண்​டார்.

Vinesh Phogat: ஹரியானா: `நமக்காக யாரும் வரப்போவதில்லை..!' - விவசாயிகள் போராட்டத்தில் வினேஷ் போகத்

இந்​நிலை​யில், சர்​வ​தேச மல்​யுத்​தப் போட்​டிகளில் சாதனை படைத்​ததற்​காக அவரை கவுரவிக்க ஹரி​யானா முதல்​வர் நயாப் சிங் சைனி தலைமையி​லான பாஜக அரசு முடிவு செய்​தது.

ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்​பு​களில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்​றும் அவர், விருப்​பத்​தின்​படி அரசு நடந்​து​கொள்​ளும் என்றும் முதல்​வர் நயாப்​ சிங்​ நைனி அறிவித்தார்.

வினேஷ் போகத்வினேஷ் போகத்

இந்த நிலையில் அரசு வேலை, வீடு ஆகியவை தனக்கு வேண்டாம் என்றும், ரூ.4 கோடி பரிசை தான் பெற்றுக் கொள்வதாகவும் வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.

Vinesh Phogat: ``வினேஷ் போகத் அரசியலில் நுழைந்ததை எதிர்கிறேன்" -பெரியப்பா மஹாவீர் போகத் விமர்சனம்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article