ARTICLE AD BOX
'கோலி பற்றி பென் ஸ்டோக்ஸ்!'
இந்திய அணியின் சூப்பர் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார்.
'அது ஒரு அவமானம்...'
அவர் பேசியதாவது, 'விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவருக்கு மெசேஜ் செய்திருந்தேன். இங்கிலாந்தில் உங்களுக்கு எதிராக ஆடுவதை தவறவிடுவது அவமானம் என்றேன். எனக்கு விராட் கோலிக்கு எதிராக ஆடுவது எப்போதுமே பிடிக்கும். எனக்கும் அவருக்குமான போட்டியை எப்போதுமே விரும்புவேன். ஏனெனில், நாங்கள் இருவருமே ஒரே மனநிலையை கொண்டவர்கள்.
Virat Kohli : 'நான் இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன்!' - ஆதங்கப்படும் ஸ்ரீகாந்த்கிரிக்கெட் களத்தை ஒரு போர்க்களம் போன்று பார்ப்போம். அவரின் விடாப்பிடியான குணாதிசயத்தையும் சவாலளிக்கும் திறனையும் இந்திய அணி தவறவிடும். கோலி இங்கிலாந்திலுமே நன்றாக ஆடியிருக்கிறார். அசாத்தியமான வீரர்.
Ben Stokesஎல்லா பாராட்டுகளுக்கும் தகுந்தவர். நம்பர் 18 யை அவருக்கான அடையாளமாக மாற்றிவிட்டார். இனி வேறெந்த வீரரையும் அந்த எண் கொண்ட ஜெர்சியோடு பார்ப்போமா என தெரியவில்லை.' என்றார்.
Virat Kohli : 'கோலியின் ஓய்வுக்கு பிசிசிஐ-யும் தான் காரணம்!' - ஏன் தெரியுமா?
7 months ago
9







English (US) ·