Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

6 months ago 8
ARTICLE AD BOX

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

Virat KohliVirat Kohli

ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணியின் முகமான நட்சத்திர வீரர் விராட் கோலி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக பெங்களூரு அணி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், 'நம்முடைய அணியை வரவேற்க கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலையும் இழப்புகளையும் அறிந்து ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உடல்நலமும்தான் எங்களுக்கு ரொம்பவே முக்கியம். நெரிசலால் உயிரிழந்வர்களுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

விராட் கோலிவிராட் கோலி

ஊடகங்கள் மூலம் இந்த செய்திகளை அறிந்தவுடன் நிகழ்ச்சியை நிறுத்தி உள்ளூர் நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலின்படி நடந்துகொண்டோம். ரசிகர்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறோம்.' என்றார்.

இந்தப் பதிவை பகிர்ந்திருக்கும் விராட் கோலி, 'இந்தத் துயரத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உடைந்து நொறுங்கியிருக்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.

Read Entire Article