Virat Kohli : 'எனக்கு சதத்தை விட அணியின் வெற்றிதான் முக்கியம்!'- ஆட்டநாயகன் விராட் கோலி

9 months ago 8
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Kohli

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, 'பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸை போன்றுதான் இங்கேயும் ஆடினேன். சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆட வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப்களை பலப்படுத்துவதுதான் இந்த மாதிரியான பிட்ச்களில் ரொம்பவே முக்கியம். நான் சிங்கிள்ஸ் எடுப்பதில் ரொம்பவே சௌகர்யமாக இருந்தேன். எனக்குள் எந்த அவசரமும் இல்லை. சிங்கிள்ஸ் எடுப்பதிலேயே நிறைவாக உணர்ந்தேன். ஆட்டத்தில் எப்படி அழுத்தத்தை கையாள்கிறோம் என்பதே முக்கியம்.

IND Vs AUS: `கம்மின்ஸ் மாதிரி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை' - ஆஸி., கேப்டன் ஸ்மித்

கையில் விக்கெட்டை வைத்துக் கொண்டு போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றால் எதிரணியினரே நமக்கு தேவையான ரன்களை எடுப்பதற்கான பந்துகளை வீசுவார்கள். நான் எப்போதுமே தனிபட்ட சாதனைகளை பற்றி யோசித்ததே இல்லை.

Kohli

தனிப்பட்ட சாதனைகளை பற்றி அதிகம் நினைக்காத போதுதான் அவை நிகழும் என்று கூட நினைக்கிறேன். இன்றைக்கு சதம் அடித்திருந்தால் நல்ல விஷயமாக இருந்திருக்கும். ஆனாலும் அதைவிட அணியின் வெற்றிதான் முக்கியம். தனிப்பட்ட சாதனைகளை பற்றி நினைக்கும் நிலையில் நான் இல்லை.' என்றார்.

Read Entire Article