ARTICLE AD BOX
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது.
2024 டி20 உலகக்கோப்பை வென்றவுடன், சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர்.
இதே போல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் இருவரும் ஓய்வை அறிவித்து விடுவார்களோ என ரசிகர்கள் அச்சம் கொண்டிருந்தனர்.
விராட் கோலிஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2027ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடத் திட்டமிட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விராட் கோலியிடம், "கிரிக்கெட்டில் உங்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், “அடுத்த பெரிய இலக்கு என்ன என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2027 உலகக்கோப்பையை வெல்வது பெரிய இலக்காக இருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலிஇதன் மூலம், 2027 உலகக்கோப்பையில், விராட் கோலி விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Kohli: "பொய் சொல்லி கோலியிடம் ஷூ வாங்கினேன்; அடுத்த மேட்சிலேயே.." - சுவாரசியம் பகிரும் நிதிஷ் ரெட்டிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·