Virat Kohli : 'நாங்க 3 பேரும் உயிரைக் கொடுத்து ஆடியிருக்கோம்..' - நெகிழ்ந்த விராட் கோலி!

6 months ago 7
ARTICLE AD BOX

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது பெங்களூரு அணி. அந்த அணியின் 18 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்திருக்கிறது. இந்த சீசனை கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதே அந்த அணியின் நோக்கமாக இருந்தது.

Gayle - Virat Kohli - AB DevilliersGayle - Virat Kohli - AB Devilliers

இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கோலி நெகிழ்ச்சியாக நிறைய விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்களான கெய்லும் டீவில்லியர்ஸூம் நேற்று மைதானத்தில் இருந்தனர். அவர்களோடு இணைந்தும் வெற்றியை கொண்டாடியதோடு, கோலி அவர்களைப் பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

RCB : ''பஞ்சாபை வீழ்த்த இப்படித்தான் திட்டமிட்டோம்!'' - புவனேஷ்வர் குமார்

கோலி பேசியதாவது, 'நாங்கள் மூன்று பேரும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஆண்டுகளை ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்காக அர்ப்பணித்தோம், ஆனால், அது கைக்கூடாமல் போனது. இந்த கோப்பை அவர்களுடையதும் கூட, அவர்கள் தங்கள் முழு மனதையும் உயிரையும் இதற்காக கொடுத்திருக்கிறார்கள்.

Kohli - Anushka SharmaKohli - Anushka Sharma

2014 ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்கா தொடர்ந்து மைதானத்திற்கு வந்து பெங்களூரு அணிக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். 11 வருடங்களாக பல கடினமான போட்டிகளை நேரில் பார்த்துள்ளார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார். மேலும், அவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்தான். அதனால் இந்த வெற்றி அவருக்கும் முக்கியமான ஒன்று.' என்றார்

RCB : '10 வருசத்துல 4 ஐ.பி.எல் கப் ஜெயிச்சிட்டேன்' - ஆட்டநாயகன் க்ரூணால் பாண்ட்யா
Read Entire Article