Virat Kohli: "நான் தனிமையாக உணருவதில்லை; காரணம்..." - பர்சனல் பகிர்ந்த விராட் கோலி

7 months ago 8
ARTICLE AD BOX

தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் உடன் RCB அணியின் பாட்காஸ்டில் கலந்துகொண்ட விராட் கோலி, தனது தனிப்பட்ட நேரம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது உணவகம் அறைகளில் தனிமையை உணர்வது உண்டா எனத் தொகுப்பாளர் கேட்க, அதற்குத் தான் தனிமையாக உணர்வதில்லை என்றும், அதே நேரத்தில் மற்றவர்களுடன் பழகாமல் இருப்பதும் எனக்குச் சரியானதாக இருக்கும் எனப் பதிலளித்துள்ளார் விராட்.

RCB PodcastRCB Podcast

"எனக்கு இருப்பதுபோல தீவிரமான கவனம் கிடைக்காத ஒருவருக்குத் தனிமையாக இருக்கலாம். ஆனால் வெளியில் தீவிரமான அட்டென்ஷன் கிடைக்கும்போது, எனக்கு என் அறைதான் பாதுகாப்பான இடம்" எனக் கூறியுள்ளார்.

"அமைதியில்தான் சமநிலையுடன் இருக்கிறேன்"

"நான் நாள் முழுவதும் என் குடும்பத்தினருடன் தொலைப்பேசியில் உரையாடுவேன். எனக்கு என் இடத்தில் என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

எனக்கு, நான் தனிமையாக இருக்கிறேன், வெளியில் சுற்ற வேண்டும், இந்த இடத்துக்குச் செல்லலாம், அந்த இடத்துக்குச் செல்லலாம் என்றெல்லாம் தோன்றாது.

எனக்குக் கிடைத்திருப்பவற்றைக் கொண்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று பேசியுள்ளார் விராட்.

விராட் கோலிவிராட் கோலி

தான் அமைதியாக இருக்கும்போதுதான் சமநிலையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"நான் அவ்வப்போது சக வீரர்களுடன் வெளியில் சுற்றுகிறேன். அது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் விஷயம்தான். ஆனால் தினசரி சுழற்சியில் நான் என் அறையிலிருந்து என் எனர்ஜியை பாதுகாத்துக்கொள்ள அல்லது நாள் முழுவதும் செலவழிக்கப்பட்ட எனர்ஜியை மீட்டுருவாக்கம் செய்ய விரும்புகிறேன்." என்று பேசியுள்ளார்.

Virat Kohli in IPL 2025

IPL 2025 சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார் 36 வயது கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 11 இன்னிங்ஸ்களில் 505 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஆர்.சி.பி அணிக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளதால், டேபிளில் முதலிடத்தில் உள்ளது. ஆர்.சி.பி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது எனலாம்.

Virat Kohli: `என் மகனை உருவாக்கியது அவர் தான்’ - யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article