Virat Kohli: `நீ சிங்கம் தான்...' - பகிர்ந்த கோலி; நெகிழ்ந்த STR; வைரலான பதிவு

7 months ago 8
ARTICLE AD BOX

நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது விருப்பமான பாடல் குறித்து பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

IPL2025 சீசனில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Virat Kohli Virat Kohli

ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் இருக்கும் விராட் கோலி 10 போட்டிகளில் 443 ரன்கள் குவித்துள்ளார். முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகின்றனர் ஆர்.சி.பி வீரர்கள்.

Virat Kohli -ன் ஃபேவரைட் பாடல்

ஆர்.சி.பி அணிக்காக அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலியிடம் அவரது சமீபத்தில் ஃபேவரைட் பாடல் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது 'இதைக் கேட்டால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள்' எனக் கூறி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிலம்பரசன் `பத்து தல' படத்தில் இடம்பெற்ற `நீ சிங்கம் தான்' என்ற தமிழ்ப் பாடலை ஓடவிட்டார் அவர்.

விராட் கோலியின் இந்த செயல் அனைவருக்கும் சர்ப்ரைசிங்காக அமைந்துள்ளது. குறிப்பாக அவரது தமிழ் ரசிகர்களுக்கு!

?

“You’ll be shocked”, he says. We’re grooving too! pic.twitter.com/NlZTNAZbjD

— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 1, 2025

சூப்பர் ஹிட் பாடலான நீ சிங்கம் தான், பாடலாசிரியர் விவேக் வரிகளில் சித் ஶ்ரீராம் குரலில் உருவானது. வெளியான நாள் முதல் இன்று வரை நெட்டிசன்கள் மத்தியில் வலம் வரும் பாடலாக இது இருக்கிறது.

குறிப்பாக லெஜண்டரி விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பாடலை பின்னணியில் போட்டு எடிட் செய்யும் ரீல்கள் வைரலாவது உறுதி. ரசிகர்களின் உணர்வுடன் கலந்த பாடல் விராட்டின் ஃபேவரைட்டாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக மாறியுள்ளது. பலரும் விராட் தென்னிந்திய பாடல்கள் கேட்பது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கோலி சொன்ன இந்த வீடியோவுக்கு `நீ சிங்கம்தான்' என பதிலளித்து ட்வீட் செய்திருக்கிறார் சிலம்பரசன்.

Virat Kohli: '335 கேட்ச்கள்' - ரிக்கி பான்டிங், ராகுல் ட்ராவிட்டை கடந்து விராட் கோலி சாதனை!
Read Entire Article