ARTICLE AD BOX
நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பலரும் விஷால்- சாய் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விஷாலின் தந்தை G. K ரெட்டி இந்நிலையில் சென்னையில் இன்று விஷாலின் தந்தை G. K ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
“ஒவ்வொரு முறையும் விஷால் திருமணம் குறித்து வெளியில் சொல்லியபோது அவை தடங்களில் முடியும்.
அதனால்தான் இந்த முறை திருமண நிச்சயதார்த்தத்தை யாருக்கும் சொல்லாமல் சிம்பிள் ஆக நடத்தினோம்.
தான் வாங்கிய புதிய பிளாட்டில் நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் அங்குதான் நிச்சயதார்த்தம் நடந்தது. எங்கள் வீட்டில் எல்லோரும் காதல் திருமணம்தான்.
சாய் தன்ஷிகா, விஷால்காதல் திருமணமென்றால் பெற்றோருக்குப் பிரச்னை இல்லை. அவர்களுக்குப் பிடித்தவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
நடிகர் சங்க கட்டட வேலைகள் முடிந்ததும் விஷால் கல்யாணம். இரண்டு மாதங்களில் திருமணம் நடந்துவிடும்" என்று கூறியிருக்கிறார்.
Vishal: "3 நாட்களுக்கு ரிவியூ எடுக்காதீர்கள்... ஆக. 29ல் நல்ல செய்தி" - விஷால் பேச்சு!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·