ARTICLE AD BOX
நடிகை சாய் தன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் விஷால்.
இன்று நடைபெற்ற 'யோகி டா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை விஷாலும், சாய் தன்ஷிகாவும் அறிவித்திருக்கிறார்கள்.
விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.
Vishal: 'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை' - தன்ஷிகாவைக் கரம் பிடிக்கும் விஷால்
Vishal & Sai Dhanshikaஇந்த நிகழ்வில் சாய் தன்ஷிகா பேசுகையில், "இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். 20 வருஷமா இந்த ஒரு நாளுக்காக காத்திருந்தோம்.
இன்னைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்திருந்தோம். அதைப் பார்த்த பிறகும்கூட '15 வருடமாக நம்ம நண்பர்கள். இனியும் நாம் நண்பர்களாகவே இருப்போம்'னு சொல்லியிருந்தோம். 15 ஆண்டுகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்தோம். ஆம், நாங்க ஆகஸ்ட் 29-ம் தேதி திருமணம் பண்ணிக்கவிருக்கிறோம்," எனக் கூறினார்.
Vishal & Sai Dhanshikaஇவரைத் தொடர்ந்து விஷால் பேசுகையில், "பேரரசு சார், கொஞ்சம் நாள் கிசு கிசுக்கள் பரவவிட்டுட்டு அப்புறமாக திருமணம் பத்தி அறிவிக்கலாம்னு சொல்லியிருந்தார்.
'கிசு கிசுலாம் போதும் சார்! நாங்க இருவரும் கண்டிப்பாக வடிவேலு - சரளா அம்மா மாதிரி இருக்கமாட்டோம்.
எங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் இருக்கு. இந்தப் படத்தோட ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு. அவங்களோட அப்பாவும் இங்கதான் இருக்கார். அவர் ஆசிர்வாதத்துடன் இங்கே அறிவிக்கிறேன்.
I'm going to marry Sai Dhanshika! இதைத் தவிர எங்க ரெண்டு பேரைப் பத்தி பேசி இந்த நிகழ்வைக் கெடுக்க விரும்பல," எனக் கூறினார்.

7 months ago
9





English (US) ·