What to watch on OTT: `டூரிஸ்ட் ஃபேமிலி', `லால் சலாம்' - இந்த வாரம் ஓ.டி.டி-யில் என்ன ரிலீஸ்?

6 months ago 7
ARTICLE AD BOX

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் - (OTT Release after Theatre Release)

டூரிஸ்ட் ஃபேமிலி (தமிழ்)

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் கடந்த மே 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

இலங்கையில் ஏற்பட்ட வறுமை காரணமாக சசிகுமார் தனது குடும்பத்துடன் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரம் வருகிறார். அதன் பிறகு சென்னைக்கு வருகிறார். நல்ல ஃபேமிலி திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் ஜூன் 2-ம் தேதி ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tourist Family Tourist Family

ஜாட் (இந்தி)

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிகர்கள் சன்னி தியோல், ரந்தீப் ஹூடா, ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், வினீத் குமார் சிங் ஆகியோர் நடிப்பில் இந்தியில் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இத்திரைப்படம் வெளியானது. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த இப்படம் ஜூன் 4-ம் தேதி ‘நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Nani: எளிமையான, மனதை வருடும் படங்களே இன்றைய தேவை - ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய நானி

பெல்லி கனி பிரசாத் (தெலுங்கு)

அபிலாஷ் ரெட்டி கோபிடி இயக்கத்தில் நடிகர்கள் சப்தகிரி, பிரியங்கா சர்மா, முரளிதர் கவுட், லக்ஷ்மன், அன்னபூர்ணம்மா, பிரமோதினி, பாஷா, ஸ்ரீனிவாஸ், பிரபாவதி, ரோஹிணி ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பெல்லி கனி பிரசாத்’. தெலுங்கு மொழியில் நகைச்சுவை திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் ஜூன் 5-ம் தேதி ‘ஈடிவி வின் (ETV Win)’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

லால் சலாம் | விக்ராந்த், ரஜினி, விஷ்ணுலால் சலாம் | விக்ராந்த், ரஜினி, விஷ்ணு

லால் சலாம் (தமிழ்)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. இத்திரைப்படம் கடந்த 2024 பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும், நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு வருடம் கழித்து இத்திரைப்படம் ஜூன் 6-ம் தேதி ‘சன் நெக்ஸ்ட்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

லால் சலாம் - சினிமா விமர்சனம்

நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்கள் - (OTT Release)

ஸ்டோலன் (Stolen) - இந்தி

கரண் தேஜ்பால் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷேக் பானர்ஜி, மியா மெல்சர், ஷுபம் வர்தன், ஹரிஷ் கண்ணா, சாஹிதுர் ரஹ்மான் ஆகியோர் நடிப்பில் ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டோலன்’.

திரில்லர் ஜானரில் ஜூன் 4-ம் தேதி ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது.

Stolen Movie - Amazon PrimeStolen Movie - Amazon Prime

ஓடிடியில் வெளியாகியுள்ள சீரியஸ்களின் பட்டியல்

ஸ்டிக் (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவி ஓடிடி தளம்

தேவிகா & டேனி (தெலுங்கு) - ஜியோ ஹாட்ஸ்டார்

சல் கபட், தி டிஷப்ஷன் (Chhal Kapat - The Deception) (இந்தி) - ஜீ5

Read Entire Article