What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ்ட்!

6 months ago 7
ARTICLE AD BOX

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படங்களின் பட்டியல்.

தக் லைஃப் (தமிழ்):

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் மணிரத்னமும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியானது.

Thug Life Thug Life

பேரன்பும் பெருங்கோபமும் (தமிழ்):

சிவப்பிரகாஷ் இயக்கத்தில் நடிகர்கள் விஜித் பச்சன், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சாய் வினோத், சுபத்ரா ராபர்ட், லோகு, பாவா சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. ஆணவக் கொலை பற்றி பேசும் படமாகவும், அதை அரங்கேற்றும் ஜாதி வெறியர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பேசியிருக்கிறது இத்திரைப்படம். இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் நேற்று (6.6.25) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி

மெட்ராஸ் மேட்னி (தமிழ்)

கார்த்திகேயன் மணி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிபிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, சுனில் சுகதா, அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. ஒரு நடுத்தர ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையில் நடக்கும் உணர்ச்சிகளை காட்டும் திரைப்படமாகவும், நடுத்தர குடும்பத்தின் வாழ்வியலை யதார்த்தமாக இத்திரைப்படம் சொல்லியிருக்கிறது. இத்திரைப்படம் நேற்று (6.6.25) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Madras Matinee MovieMadras Matinee Movie

பரமசிவன் பாத்திமா (தமிழ்)

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் நடிகர்கள் விமல், சாயாதேவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பரமசிவன் பாத்திமா’. மதப் பிரச்னை காரணமாக மோதிக்கொள்ளும் கிராமவாசிகளை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் நேற்று (6.6.25) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஆப்யந்தரா குட்டவாளி (மலையாளம்):

சேதுநாத் பத்மகுமார் இயக்கத்தில் நடிகர்கள் ஆசிஃப் அலி, ஜெகதீஷ், ஹரிஸ்ரீ அசோகன், சித்தார்த் பரதன் ஆகியோர் நடிப்பில் மலையாள மொழியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆப்யந்தரா குட்டவாளி’. இப்படம் நேற்று (6.6.25) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Housefull 5 MovieHousefull 5 Movie

ஹவுஸ்ஃபுல் 5 (இந்தி):

தருண் மன்சுகானி இயக்கத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், பர்தீன் கான், ஷ்ரேயாஸ் தல்படே, நானா படேகர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திர பாலிவுட் நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹவுஸ்ஃபுல் 5’. ‘ஹவுஸ்ஃபுல்’ திரைப்படத்தின் முதல் பாகம் 2010-ம் ஆண்டு வெளியானது.

அதன் பிறகு தொடர்ச்சியாக அந்தத் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. ஒரு சொகுசு பயணக் கப்பலில் ஒரு கோடீஸ்வரர் மர்மமான முறையில் இறந்த பிறகு, அந்தக் கொலையை செய்தவர் யார் என்று தேடுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேற்று (6.6.25) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Housefull 5: 'ஒரு படத்துக்கு ரெண்டு க்ளைமேக்ஸ்!' - முதல் முறையாக இரண்டு வெர்ஷன்களுடன் பாலிவுட் படம்!
Read Entire Article