What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் & சீரிஸ்

6 months ago 7
ARTICLE AD BOX

தியேட்டர் ரிலீஸ்கள்:

குபேரா:

தனுஷ், டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'குபேரா'. நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Kubera Kubera

DNA:

அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'DNA'. 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்:

வைபவ், அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது 'சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்'. இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Chennai City GangstersChennai City Gangsters

8 VASANTHALU (தெலுங்கு):

8 ஆண்டுகள் பயணிக்கும் ஒரு பெண்ணின் காதல் அத்தியாயமும், அதன் உடனே நடக்கும் நிகழ்வுகளுமே இந்த '8 வசந்தாலு' திரைப்படம். அனந்திகா சனில்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

UNITED KINGDOM OF KERALA (மலையாளம்):

தன் மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சிக்கும் தந்தை, அதற்கு மாறாக தன் ஊரில் இளைஞர்களுடன் இணைந்து மகன் செய்ய நினைக்கும் விஷயங்கள், அதனால் அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளுமே இந்த திரைப்படம். இந்த திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Sitaare Zameen Par Sitaare Zameen Par

SITAARE ZAMEEN PAR (இந்தி):

2018-ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான 'சாம்பியன்ஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும் இந்த 'சித்தாரே ஜமீன் பர்'. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா டி’சோசா நடித்துள்ளனர். அறிவுசார் சவால் கொண்ட இளைஞர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

28 YEARS LATER (ஆங்கிலம்):

மிகவும் சக்தி வாய்ந்த வைரஸ் ஒன்று பரவி, 28 ஆண்டுகள் கழித்து அதனை அழிக்க வழி ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதற்கடுத்த நிகழும் விஷயங்களை வைத்து த்ரில்லர் படமாக இந்த '28 YEARS LATER' படத்தை எடுத்திருக்கிறார்கள். இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

28 Years Later - Cillain Murphy 28 Years Later - Cillain Murphy

தியேட்டர் டூ ஓடிடி வெளியீடு :

ஜின் - தி பெட் (தமிழ்) - Sun NXT - June 20

Prince and Family (மலையாளம்) - Zee5 -June 20

Ground Zero (இந்தி) - Zee5 - June 20

ஓடிடி தொடர்கள்:

Kerala Crime Files 2 (மலையாளம்) - Jio Hotstar - June 20

The Waterfront (ஆங்கிலம்) - Netflix - June 19

Read Entire Article