WTC: "டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?" - ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்

6 months ago 7
ARTICLE AD BOX

வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் தேசிய கிரிக்கெட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தாண்டி IPL-ல் கவனம் செலுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் சாடியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகிய மூன்று வீரர்களும் முக்கிய பங்காற்றுவார்கள் எனக் கூறப்பட்டது.

HazelwoodHazelwood

இதனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த நிலையில் ஹேசல்வுட்டின் IPL பங்களிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன்.

WTC Final: "ரோஹித்தும் புஜாராவும் அவர்களை அவர்களே திட்டிக்கொள்வார்கள். காரணம்..." - ரவி சாஸ்திரி

ஐபிஎல் 2025ல் முதன்முதலாகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆர்.சி.பி அணி. இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார் ஹேசல்வுட்.

ஐபிஎல் 2025 தொடர் பாதியில் நின்ற பிறகு ஹேசல்வுட்டின் உடல்நிலை குறித்த கவலைகள் இருந்தன. எனினும் தொடரின் கடைசிக் கட்டத்தில் கம்பேக் கொடுத்த ஹேசல்வுட் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Mitchel JhonsonMitchel Jhonson

மிச்டெல் ஜான்சன் இதுகுறித்து வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்தித் தளத்தில், "சமீப ஆண்டுகளில் ஹேசல்வுட்டின் உடல்நிலை குறித்து எங்களுக்குக் கவலைகள் உள்ளன.

தேசிய அணியின் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதை விட தாமதமாக நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் அவரது முடிவு ஆச்சரியத்தைத் தருகிறது" என எழுதியுள்ளார்.

WTC Finals: `இடம் கிடைத்திருந்தால் சிறப்பாக விளையாடி இருப்பேன்!' - அஷ்வின் ஓபன் டாக்!

WTC இறுதிப்போட்டியில் 34 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்கத் தவறினார்.

"எங்களது வெற்றிகரமான 'பிக் ஃபோர்' பவுலிங் அட்டாக்கான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன் ஆகியோர் இச்சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.

அனுபவமிக்க வீரர்கள் ஆஷஸ் தொடரில் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்திருந்தால், அது சரியான மனநிலையா என்ற கேள்வி எழுகிறது.

எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நமது அடுத்த டெஸ்ட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கைக் கொள்வது அவசியம்" என்றும் கூறியிருக்கிறார் மிட்செல் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியினர் அடுத்ததாக ஜூன் 25ம் தேதி வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

ICC: 'இனி ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்துதான்' - ஒருநாள், டி20, டெஸ்ட் விதிகளில் மாற்றம்; முழு விவரம்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article