ARTICLE AD BOX
சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சாம் இயக்கி இருக்கும் படம் 'யோலோ'.
பூர்ணேஷ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர்.
சகிஷ்னா தேவி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் 'யோலோ' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.
'யோலோ'இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.கே செல்வமணி, " தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதை காட்டிலும், படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கிறது.
நடிகர் படவா கோபி 7 வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஒரு படத்தை ஆரம்பித்தார்.
ஆனாலும் அந்த படத்தின் டைரக்டர் எல்லா லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைத்தார்.
இதனால் 7 ஆண்டுகளாக அந்த படைப்பு வெளிவராமலேயே இருக்கிறது. அதேவேளை புதிதாக வரும் இயக்குநர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும்.
இயக்குநர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ, சிந்திக்கவோ கூடாது.
ஆர். கே. செல்வமணிஉங்களை நம்பி பணம் போட வரும் தயாரிப்பாளர்களை மதித்து, அனுசரியுங்கள்.
அப்போது தான் உங்கள் 2-வது படத்தில் இருந்து முன்னேற்றம் தொடங்கும்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·