ARTICLE AD BOX
நடிகர் அஜித் கடந்தாண்டு முதல் அடுத்தடுத்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். அந்த ரேஸ்களில் பங்கேற்று டாப் இடங்களையும் பிடித்து வருகிறார் அஜித்.
கார் ரேஸில் தற்போது பரபரப்பாக ஈடுபட்டு வருவதால் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்தான அப்டேட்கள் எதுவும் வெளியிடவில்லை.
Good Bad Uglyதற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார் அஜித். கார் ரேஸில் அதிகமாக ஈடுபாடு காட்டத் தொடங்கிய பிறகு அஜித் சில பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.
கார் பந்தயத்தின் இடைவெளியில் 'ஹாலிவுட் நடிகர் ப்ராட் பிட் சமீபத்தில் 'F1' என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுபோல, `நீங்களும் கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிப்பீர்களா?' எனத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Brad Pitt - F1 Movieஇந்தக் கேள்விக்கு அஜித், "ஏன் முடியாது? என் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படியான வாய்ப்புகள் வந்தால் ஏன் நடிக்காமல் இருக்கப் போகிறேன்?
‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்." எனப் பதிலளித்திருக்கிறார்.

5 months ago
7





English (US) ·