அங்கன்வாடிக்கு இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டனர்.

பழநி அருகே பாலசமுத்திரம் அடுத்துள்ள பாலாறு பகுதியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மின் இணைப்புக் கேட்டு ஒப்பந்ததாரர் முருகானந்தம், பழநி நகர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதைப் பரிசீலனை செய்த மின் வாரிய உதவிப் பொறியாளர் சிவக்குமார் (40), மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

Read Entire Article