ARTICLE AD BOX
நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவின் படி, நட்சத்திர தம்பதி வரலட்சுமி பூஜையில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
அதில் ஷாலினியின் தலையில் அஜித் குங்குமம் வைத்து விட்ட பிறகு, ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். தயங்கி நின்ற அஜித் போதும் போதும் என்க, சுற்றியிருந்தவர்கள் கூறவே, மீண்டும் விழுந்து வணங்கினார்.
உடனடியாக அஜித், "வீட்டுக்கு போய் நான் விழணும்" என ஜோக்கடிக்க சிரிப்பலைகள் எழுகின்றன. ரசிகர்கள் இந்த வீடியோவை "Couple Goals" என அழைத்து வருகின்றனர்.
அஜித் குமார்
நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஆண்டு விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
தற்போது நடிப்பதிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு தனது திறனையும் மன வலிமையையும் தானே சோதிக்கும் வண்ணம் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Ajith Kumar: ``நன்றிகடன் பட்டுள்ளேன்'' - அஜித் வெளியிட்ட வீடியோ!
4 months ago
6





English (US) ·