அணியில் பும்ராவை பயன்படுத்துவதில் லாஜிக் ஓட்டைகள் - அஜய் ஜடேஜா சாடல்

3 months ago 5
ARTICLE AD BOX

‘ஒருபுறம் இங்கிலாந்து போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் 3 போட்டிகளில்தான் ஆடுவார் என்பது பணிச்சுமை என்பது, அதேவேளையில் ஆசியக் கோப்பையில் அனர்த்தமான போட்டிகளிலெல்லாம் அவரை ஆட வைப்பது... இது என்ன தர்க்கம்?’ என்று அஜய் ஜடேஜா, இர்பாம் பதான் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோனி ஸ்போர்ட்ஸுக்கு அஜய் ஜடேஜா கூறும்போது, “பும்ராவை இப்போது ஆடவைப்பதில் என்ன தேவை? பொதுவாக அவரை பஞ்சில் சுற்றி வைத்துப் போற்றிப் பாதுகாப்பீர்கள். இப்போது தேவையில்லாத போட்டிகளில் ஆட வைப்பீர்கள். இப்போது யுஏஇ அணிக்கு எதிராகக் கூட பும்ரா தேவைப்படுவார் போலும். ஒன்று, அவரை பாதுகாக்காதீர்கள் அல்லது இதுபோன்ற அனர்த்தமான போட்டிகளில் ஆடவைக்காதீர்கள். இதுதானே தர்க்கம்? ஆனால் தர்க்கப்படி எதையும் செய்வது நம் வழக்கமல்லவே. அதான் இப்படி” என்று நையாண்டி செய்துள்ளார். “பும்ரா இன்று ஆடினால் நான் ஸ்ட்ரைக் செய்யப்போகிறேன்” என்றார்.

Read Entire Article