அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா

1 month ago 2
ARTICLE AD BOX

கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பிய​னான தென் ஆப்​பிரிக்க அணி, இந்​தி​யா​வுக்கு எதி​ராக கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கடந்த 15 ஆண்​டு​களில் இந்​திய மண்​ணில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் முதல் வெற்​றி​யாக இது அமைந்​தது.

இந்த போட்​டி​யில் 124 ரன்​களையே இலக்​காக நிர்​ண​யித்த போதி​லும் சைமன் ஹார்​மரின் சுழற்​பந்து வீச்​சால் தென் ஆப்​பிரிக்க அணி வெற்​றியை வசப்​படுத்தி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. கொல்​கத்தா போட்​டி​யில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான காகிசோ ரபாடா விலா எலும்பு காயம் காரண​மாக விளை​யாட​வில்​லை. எனினும் மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணி​யின் வெற்​றிக்கு தங்​களது பங்​களிப்பை வழங்​கினர்.

Read Entire Article