அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மேலும் 7 திருட்டு வழக்குகள் பதிவு

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மேலும் 7 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article