ARTICLE AD BOX
ஐபிஎல் 19-வது சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் வெளியிடப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறிருக்க கடந்த சீசன் முடிந்தபோதே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கப்போவதாக அடிபட்ட பேச்சு கடந்த சில நாள்களாகத் தீவிரமாகியிருக்கிறது.
Ravindra Jadeja - Sanju Samsonஅதுவும், ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே ட்ரேட் செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.
சொல்லப்போனால், டிரேடிங் டீலிங் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், ஜடேஜா தன் ஐ.பி.எல் கரியரை ஆரம்பித்த அணிக்கே செல்லப்போவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
எப்படியும் இன்னும் 4 நாள்களில் எது உண்மை என்று இரு அணிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் தெரிந்துவிடும்.
இது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவரும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரான `மிஸ்டர் ஐ.பி.எல்' சுரேஷ் ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான உரையாடலில் பேசிய சுரேஷ் ரெய்னா, ``நூர் அகமது தக்கவைக்கப்பட வேண்டும். அவர் ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். எனவே, அவர் முக்கியமாகத் தக்கவைக்கப்பட வேண்டும்.
தோனி இந்த சீசன் ஆடுகிறார், எனவே அவரைத் தக்கவைக்க வேண்டும். ருத்துராஜ் கேப்டனாகத் தொடர வேண்டும்.
ஜடேஜா - ரெய்னாஜடேஜாவை மீண்டும் தக்கவைக்க வேண்டும். அவர் சி.எஸ்.கே-வின் கன் (Gun) பிளேயர். அணிக்குப் பல வருடங்களாக நிறையப் பங்காற்றியிருக்கிறார். எனவே, `சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இருக்க வேண்டும்.
அணிக்கு உள்ளூர் ஓப்பனர் தேவை. மினி ஏலத்தில் அதற்கான வீரரைப் பார்க்க வேண்டும். டெவான் கான்வேவை வெளியிட வேண்டும்.
விஜய் சங்கருக்கு ஏற்கெனவே நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே அவரையும், தீபக் ஹூடாவையும் சி.எஸ்.கே விடுவிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?
1 month ago
2







English (US) ·