``அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது'' - `ஒய் திஸ் கொலவெறி' குறித்து தனுஷ்

1 month ago 2
ARTICLE AD BOX

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், "நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் மொழி உலகில் மூத்த மொழிகளில் ஒன்று" என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் தனுஷ்தனுஷ்

மேலும் ’ஒய் திஸ் கொலவெறி’ பாடல் குறித்து அந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த தனுஷ், " '3' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம்.

ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம்.

ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது.

அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஒர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை முழு பாடலாக உருவாக்கினோம்.

தனுஷ் தனுஷ்

’ஒய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் இந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது.

நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.

இப்படி ஒரு பாடலை உருவாக்கியது பெருமையாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Smriti : காதலருடன் நிச்சயதார்த்தம் - வீராங்கனைகளுடன் ஸ்மிரிதி மந்தனாவின் க்யூட் டான்ஸ்
Read Entire Article