அனிருத்துக்கு கல்யாணமா.? அவரே போட்ட ட்வீட் 

6 months ago 7
ARTICLE AD BOX

Anirudh Ravichander : இசையமைப்பாளர் அனிருத் மிக குறுகிய காலத்திலேயே சினிமாவில் நுழைந்து விட்டார். தனுஷால் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் அனிருத் கைவசம் தான் இருக்கிறது. 

அந்த வகையில் ரஜினியின் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் உலாவி வரும் விஷயம் அனிருத்தின் கல்யாணம் தான். அதாவது பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் வாரிசான காவியா மாறனை அனிருத் காதலிப்பதாக தகவல் வெளியானது. 

தன்னுடைய திருமணம் குறித்து அனிருத் போட்ட பதிவு

anirudh-tweetanirudh-tweet

மேலும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் போன்றோர் பேசி வந்தனர். இப்போது இதற்கு அனிருத் தனது ட்விட்டர் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார். 

எனக்கு திருமணமா, தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ட்வீட் செய்துள்ளார். இப்போது அனிருத்தின் பதிவு இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அப்போது இதெல்லாம் வதந்தியா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். 

அதுவும் அனிருத்துக்கு 34 வயதாகும் நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது அனிருத் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது  அவர் போட்ட பதிவில் இருந்தே தெரிகிறது. 

Read Entire Article