அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடியவர் நடிகர் ராஜேஷ்: இபிஎஸ் புகழஞ்சலி

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: அனைவரிடத்திலும் அன்பாகவும், இனிமையாகயும் பழகக்கூடிய அன்புச் சகோதரர் நடிகர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். நடிகர் ராஜேஷ் ‘கன்னிப் பருவத்திலே’, ‘பயணங்கள் முடிவதில்லை’ ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘நிலவே மலரே’ உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்து மக்களின் பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர்.

Read Entire Article