ARTICLE AD BOX
Coolie : இந்திய சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள படம் கூலிதான். எங்கு பார்த்தாலும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள்தான். இந்த திரைப்படத்தின் பாடல்தான் எங்கும் ஒலிக்கிறது. அந்தளவிற்கு தற்போது ரீச் ஆகி கொண்டிருக்கிறது கூலி.
இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளிவர இருக்கிறது. அதற்கான வியாபார யுக்திகள் எல்லாம் பக்காவாக பிளான் பண்ணி செய்து கொண்டிருக்கிறார் லோகேஷ். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே எக்கச்சக்கமாக வசூல் வேட்டையை தொடங்கி விட்டது.
amazon box issuesஇந்த படம் ரீச் ஆனதற்கு காரணமே லோகேஷ் தான். ஒரு படத்திற்கு எப்படியெல்லாம் மக்களையே கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று இப்போ உள்ள இயக்குனர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்த படத்தில் நிறைய திரை பிரபலங்கள் நடித்து இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்கள் என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஒரு pan இந்தியா படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, நாகார்ஜூனா, சௌபின், சாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.
அப்போ ரஜினியை மக்கள் விரும்பவில்லையா..
இந்த படத்திற்கு நிறைய டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டுஉள்ள நிலையில். அமேசான் நிறுவனம் வித்யாசமாக இந்த படத்தை “பாக்ஸ்” ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். இது சந்தோஷமான விஷயம் தான் ஆனால் கன்னடத்தில் இந்த பாக்சில் ரஜினியின் முகம் மறைத்தவாறு ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
உபேந்திரா படத்தை வைத்து, ரஜினி முகத்தின் மேல் சிடிக்கர்ஸ் ஒட்டி மறைத்தவாறு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது இப்போவரை தொடர்கிறதா அல்லது தெரியாமலா நடந்த தவறா என்று தெரியவைல்லை.
ஆனால் சிலர் அறியாமல் செய்யும் சில தவறுகள் பெரும் பிரச்சினைகளை கிளப்பிவிடுகின்றன. அப்போ கன்னடத்தில் ரஜினியை விரும்பமாட்டார்களா என்ற கேள்வி பரவலாக எழுந்த வண்ணம் இருக்கின்றன. நல்லா போய்க்கொண்டிருந்த வேளையில் யார் பார்த்த வேலை என கேள்வி கேட்டு வருகிறார்களாம் திரை வட்டாரங்கள்.

4 months ago
6





English (US) ·