ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவண், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜரானார். இதற்காக அவர், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்திருந்தார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் சுரேஷ் ரெய்னாவிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

3 months ago
5







English (US) ·