அமெரிக்க தூதரகம், பாஜக அலுவலகம் உட்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: சென்​னை​யில் அமெரிக்​க தூதரகம், பாஜக அலு​வல​கம் உட்பட 4 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.
இந்​தியா முழு​வதும் அண்​மைக் கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அண்​மை​யில் கூட பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் பெயரில் உயர் நீதி​மன்​றத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. போலீ​ஸாரின் விசா​ரணை​யில், மிரட்​டல் கும்​பல் வெளி​நாட்​டிலிருந்து செயல்​படு​வது தெரிய​வந்​துள்​ளது.

அவர்​களை சர்​வ​தேச போலீ​ஸார் உதவி​யுடன் கைது செய்ய தேவை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​வ​தாக போலீஸ் அதிகாரிகள் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் இரு தினங்​களுக்கு முன்பு சென்​னை​யில் உள்ள 9 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்கு மர்ம நபர்​கள் அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர்.

Read Entire Article