அயர்டன் சென்னா ரேஸ் கார் வாங்கிய அஜித்.. எத்தனை கோடி தெரியுமா.?

6 months ago 8
ARTICLE AD BOX

Ajith : அஜித் சினிமாவில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ அதே அளவு ரேசிலும் ஆர்வமாக இருக்கிறார். அவரது திறமையை பார்த்து பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அதுவும் அவர் பந்தயத்தில் ஈடுபடும் போது அடியும் பட்டிருக்கிறது.

சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் படியும் நடந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அஜித் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசுகிறார். ஏதாவது ஒன்றில் தான் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியும்.

அப்போது தான் அதில் நிதானமாக இருக்க முடியும். ஆகையால் ரேஸ் சமயத்தில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இப்போது பல கோடி மதிப்பிலான ரேஸ் காரை வாங்கி இருக்கிறார். அதாவது அஜித்தின் ரோல் மாடல் தான் அயர்டன் சென்னா.

ரேஸ் கார் வாங்கிய அஜித்

ajithajith

சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இப்போது அயர்டன் சென்னா நினைவாக இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் ரேஸ் காரை தயாரித்து வருகிறது.

இதை தான் இப்போது அஜித் வாங்கி இருக்கிறார். இந்த ரேஸ் காரின் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் இந்த காரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் அந்த கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு கோடி கொடுத்து அஜித் கார் வாங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

Read Entire Article