அரசியல் கதையில் நடிக்கிறார் நட்டி

2 months ago 4
ARTICLE AD BOX

‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் உமாபதி ராமையா கூறும்போது, “நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படம் இது. நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. இது அரசியல் திரைப்படம் என்றாலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக இருக்கும்” என்றார். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதியுள்ளார். இந்தப்படத்துக்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

Read Entire Article