அரசு பள்ளியில் ஆசிரியர்களால் பாலியல் தொல்லை: மாணவியின் ஆடியோவால் அதிகாரிகள் விசாரணை

4 months ago 6
ARTICLE AD BOX

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு தருவதாக மாணவிகள் பேசிய ஆடியோ வெளியான நிலையில் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசி மாணவி ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article