ARTICLE AD BOX

குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜினால் மீண்டும் ஒரு வெற்றியைச் சாதித்துள்ளது. அகமதாபாத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் தன் 4-வது வெற்றியை ஈட்டி 8 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.
217 ரன்களுக்கு எதிராக ராஜஸ்தான் சரியாகத் தொடங்கவில்லை. ஜெய்ஸ்வால் அவசரக்குடுக்கைத் தனமாக அர்ஷத்தின் பந்தை ஸ்லாஷ் செய்து டீப் தேர்ட்மேனில் கேட்ச் ஆனார். நிதிஷ் ராணாவும் அவ்வகையிலேயே அவுட் ஆனார், ஆனால் பவுலர் இந்த முறை சிராஜ். உடனேயே சஞ்சுவும் ரியான் பராகும் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி 48 ரன்களை விரைவில் எடுத்தனர். பராக் 26 ரன்களில் கேஜ்ரோலியாவிடம் வெளியேறினார்.

8 months ago
8







English (US) ·