ARTICLE AD BOX

அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். முதல் செட்டில் தொடக்கம் முதலே கனக் ஜா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் அவர் 9-6 என முன்னிலை வகித்தார்.
எனினும் கிரில் ஜெராசிமென்கோ போராடி 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தார். கோல்டன் புள்ளியாக அமைந்த இந்த செட்டை இறுதியில் கனக் ஜா 11-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களும் நெருக்கமாகவே சென்றது. இந்த செட்களையும் கனக் ஜா 11-10 என தன்வசப்படுத்தினார். முடிவில் அவர் 3:0 (11-10,11-10, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 3-0 என முன்னிலை வகித்தது.

6 months ago
9







English (US) ·