``அவர் எனக்கு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா..'' - நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்திய கமல்

6 months ago 7
ARTICLE AD BOX

 ‘தக் லைஃப்’  இசை வெளியீட்டு விழாவில் எதிரில் அமர்ந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நோக்கி பேசிய கமல்ஹாசன், ‘‘உங்கள் மொழி கன்னடம், தமிழிலிருந்து பிறந்தது’’ என்று சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கிளம்பிய கடும் எதிர்ப்பு, கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிட முடியாத அளவுக்கு சிக்கல்கள் உருவானதுனது.

இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பினர். இருப்பினும் கமல் தான் கூறியது சரி என்று மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார்.

கமல், சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ் குமாரும், தன் மீதுள்ள அன்பின் மிகுதியால் கமல் அப்படி பேசியாகவும், "கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்றும் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் திரைத்துறையில் 40-வது ஆண்டை தொடங்குவதற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கிறார் கமல்.

இதுகுறித்து காணொலி மூலம் பேசியிருக்கும் கமல், "சிவராஜ்குமார் எனக்கு ஒரு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு.

கமல்

சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்... இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது." என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்.

Kamal Haasan: "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது..!" - கன்னட மொழி விவகாரத்தில் கமல் விளக்கம்!
Read Entire Article