ARTICLE AD BOX
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான், தனது இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ரஷீத் கானின் முதல் திருமணம், 2024 அக்டோபர் மாதம் காபூலில் நடந்தது. இத்திருமணத்தில் அவரது மூன்று சகோதரர்களும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். ரஷித் கான், குடும்பத்தின் பழமையான கலாச்சார மரபில் எளிமையாக நடந்த இத்திருமணத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ரஷித் கான்இந்நிலையில் சமீபத்தில் ரஷீத் கான், ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. இதுதொடர்பான பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி ரஷித் கான், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன. அறக்கட்டளை விழா ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து சென்ற புகைப்படங்களும் வைரலாகியிருந்தன.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ரஷீத் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2025 ஆகஸ்ட் 2 அன்று, எனக்கு நிக்கா நடந்தது. என் வாழ்க்கையின் புதிய அர்த்தமுள்ள ஒரு அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறேன்.
நான் என் வாழ்க்கையில் எதிர்பார்த்த அன்பு, அமைதி கொண்ட ஒருவரைத் திருமணம் செய்தேன். சமீபத்தில், அவருடன் ஒரு அறக்கட்டளை விழாவுக்குச் சென்றிருந்தேன். அது குறித்து சிலர் தவறாகப் பேசியது வருத்தமளிக்கிறது. அவர் என் மனைவி, நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறோம். இதில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அன்பு, ஆதரவு மற்றும் புரிதலை வெளிப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி." என்று பதிவிட்டிருக்கிறார்.

1 month ago
2







English (US) ·