ARTICLE AD BOX
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
நேற்று அபுதாபியில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதில் இந்தியாவும், ஓமனும் மோதிக்கொண்டன.
188 ரன்களைக் குவித்த இந்திய அணி!
'டாஸ்' வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 188 ரன்களைக் குவித்தது.
நேற்று இந்திய அணியில் முக்கியமாக ரன்களைக் குவித்தவர்கள் அபிஷேக் சர்மா (38 ரன்கள்), சஞ்சு சாம்சன் (56 ரன்கள்), அக்சர் பட்டேல் (26 ரன்கள்), திலக் வர்மா (29 ரன்கள்) ஆகியோர் ஆவார்கள்.
ஆசிய கோப்பை: இந்தியா Vs ஓமன்ஓமன் அணி பெர்ஃபாமன்ஸ் எப்படி?
189 ரன் டார்க்கெட்டில் விளையாடிய ஓமன் அணியின் தொடக்க ஜோடி இந்திய அணிக்கு கடுமையான டஃப் கொடுத்தது.
ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 167 ரன்களைச் சேர்த்தது.
இதனால், இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
கிரிக்கெட்டின் குட்டி அணியாக ஓமன் இருந்தாலும், நேற்று இந்திய அணிக்கு டஃப் கொடுத்தே தோல்வியைத் தழுவியது.
எது எப்படியோ, வாழ்த்துகள் இந்திய அணி!
கிரிக்கெட் மட்டுமா? மாற்றத்தை நோக்கி நகரும் பிற விளையாட்டுகள்! பரிணாம வளர்ச்சியா? பரிதாப வீழ்ச்சியா?
3 months ago
5







English (US) ·