ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.38 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியாக செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திய இளைஞரை எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடம் ஆர்.பி.எஃப் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, எழும்பூர் ரயில் நிலையத்தின் 8-வது நடைமேடைக்கு சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் வந்து இறங்கிய இளைஞர், சந்தேகிக்கும் வகையில் இருந்ததால் அவரை ஆர்பிஎஃப் போலீஸார் பிடித்த, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Read Entire Article