ஆன்லைன் மோசடியில் சுருட்டும் பல கோடி ரூபாயை 15 மாநிலங்களுக்கு மாற்றும் ‘சைபர்’ கும்பல்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில் பறிக்​கும் கோடிக்​கணக்​கான பணத்​தை, ‘சைபர்’ மோசடி கும்​பல் ஒரே நேரத்​தில் 15-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களுக்கு மாற்​று​வ​தாக அதிர்ச்​சி​யூட்​டும் தகவல் வெளி​யாகி உள்​ளது.

இரட்​டிப்பு பணம், டிஜிட்​டல்கைது, பகு​திநேர வேலை, கிரிப்டோ கரன்​சி, பங்​குச்​சந்தை முதலீடு, வாட்​ஸ்​-அப் ஹேக்​கிங் உட்பட பல்​வேறு வகை​யான சைபர் க்ரைம் மோசடிகள் தின​மும் நடந்து வரு​கின்​றன. அந்த வகை​யில் ஆன்​லைன் வர்த்தக பணமோசடி​யும் ஒன்​று. இந்த வகை மோசடி செய்​யும் நபர்​கள் யார்? எங்​கிருக்​கிறார்​கள்? எங்​கிருந்து பேசுகிறார்​கள்? என்பன போன்ற எந்த விபர​மும் தெரி​யாது.

Read Entire Article