ARTICLE AD BOX

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிஹரனை மற்ற கைதிகளைப்போல நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரி ஹரன் என்பவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும், தொலைபேசி மூலம் பேச வாய்ப்பளிக்கவி்ல்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாயார் கல்பனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

8 months ago
8







English (US) ·