ARTICLE AD BOX

ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல்.
டாப் 10 பவுலர்களில் ஒருவராகத் திகழும் இவர், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை என்பது இப்போதைய அணித் தேர்வுக்குழுவின் விசித்திரங்களில் மகத்தான விசித்திரமே. டாப் 10-ல் இருப்பதோடு கிருணல் பாண்டியா சிக்கன விகிதத்திலும் 7-ம் இடத்தில் இருக்கிறார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தாக்கம் ஏற்படுத்தும் வீரர்கள் பட்டியலில் 6-ம் இடத்தில் இருக்கிறார். இதோடு பேட்டிங்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக எடுத்த அதிரடி 73 ரன்களும் சேரும்போது கிருணல் பாண்டியாவின் பங்களிப்பின் பரிமாணம் புரியும்.

6 months ago
8







English (US) ·