ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில், 103 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்டத்தில் ஷஷாங் சிங் 36 பந்துகளில், 52 ரன்கள் விளாசி அசத்தினார்.
220 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 36, ஷிவம் துபே 42 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். சிஸ்கே அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது.

8 months ago
8







English (US) ·