ARTICLE AD BOX

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் மலட்டாற்றில் சகோதரிகள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரசூர் வழியாக மலட்டாறு பாய்கிறது. கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசூர் கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இன்று நண்பகலில் மலட்டாற்றில் குளித்துள்ளனர்.
அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த அரசூர் பழனி என்பவரின் மகள்கள் சிவசங்கரி (20), அபிநயா (15) மற்றும் அவர்களது உறவினரான கடலூர் மாவட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (15) ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷின் சகோதரர் கிரண்குமார், வீட்டுக்குச் சென்று பெரியவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

7 months ago
8







English (US) ·