ஆஷஸ் முதல் டெஸ்ட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த பேரிடி!

1 month ago 2
ARTICLE AD BOX

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விலகியுள்ளார்.

Read Entire Article