ஆஸி.யை வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா!

6 months ago 7
ARTICLE AD BOX

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இதன் மூலம் 1998-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி ஐசிசி தொடரை வென்று அசத்தியுள்ளது.

சுமார் 27 ஆண்டு காலம் ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கி வந்து நழுவ விட்டுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. எத்தனையோ அரை இறுதி, இறுதி என அதை சொல்லலாம். கடந்த 2015 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. அப்போது அந்த அணியின் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்தில் அப்படியே கலங்கிய தருணம் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. தங்களை எதிர்த்து ஆடும் அணிகள் மட்டுமல்லாது மழையும் தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் கனவை கரைத்துள்ளது.

Read Entire Article