ARTICLE AD BOX

லக்னோ: இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் துருவ் ஜூரெல் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது.
ஜேக் எட்வர்ஸ் 78 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் விளாசினார். கேப்டன் நேதன் மெக்ஸ்வீனி 162 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். சேம் கான்ஸ்டாஸ் 49, கேம்ப்பெல் கெல்லாவே 9, ஆலிவர் பீக் 29, ஜோஷ் பிலிப் 39, வில் சுதர்லேண்ட் 10, கூப்பர் கானொலி 0, கோரி ரோச்சிசியோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

3 months ago
5







English (US) ·