இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படுகிறது

7 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவினர் மும்பையில் இன்று கூடுகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

Read Entire Article