இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக டி20 தொடரை வென்றது இந்திய மகளிரணி!

5 months ago 7
ARTICLE AD BOX

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சோபியா டங்க்லி 22, டாமி பியூமாண்ட் 20, ஆலிஸ் கேப்ஸி 18 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சாரணி, ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

Read Entire Article