ARTICLE AD BOX
ஐபிஎல் 18- வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. நேற்றையப் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதின. இன்றைய (மார்ச் 23) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
தோனி இந்நிலையில் போட்டிக்கு முன்பு தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கிறார். "நான் சிஎஸ்கே அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அது என்னுடைய அணி. நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
IPL 2025 : 'தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!' - CSK-வின் முன்னாள் வீரர் பாலாஜி பேட்டிசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் தோனி. 2008 முதல் 2023 வரை சுமார் 15 ஆண்டு காலம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு முதல் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
தோனி ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இடம் பெற்று இருக்கிறார். 43 வயதான நிலையிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
KKR vs RCB: ``இந்த அணிக்கு வந்து 10 நாள்கள்தான் ஆகிறது; அதற்குள்..'' - ஆட்டநாயகன் குர்னல் பாண்டியாVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
7







English (US) ·