ARTICLE AD BOX

நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா.
கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. பின்னர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், இன்ஸ்டா ஸ்டோரியில், இந்த ஆண்டு பல பாடங்களைக் கற்றுக் கொண்ட தாகத் தெரிவித்துள்ளார்.

4 months ago
6





English (US) ·